பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா தொடக்கம்

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறுகிறது. அதேபோல் நிகழ் வருடம் ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் முன் கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது.
திங்கள்கிழமை முதல் வரும் 23-ஆம் தேதி வரை மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகின்றன. 
திருவிழாவை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி மறுகாப்புக் கட்டுதலும், 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
1-ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும், மகா மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பின்னர், பரிவட்டம் சூட்டுதல் மற்றும் திருத்தேர் நிலை பெயர்த்து வைக்கும் நிகழ்ச்சியும்  நடைபெறுகின்றன. 
2-ஆம் தேதி காலை திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
3-ஆம் தேதி இரவு பொங்கல், மாவிளக்கு பூஜையும், 4-ஆம் தேதி அதிகாலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி மாலை மஞ்சல் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர்,  எட்டுப்பட்டி ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com