நாமக்கல்

மனுத் தாக்கலுக்கு யாரும் வராததால் வெறிச்சோடிய ஆட்சியர் அலுவலகம்

DIN

வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால், நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.
நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலராக, ஆட்சியர் மு.ஆசியா மரியம் செயல்படுகிறார். இத்தொகுதிக்கான மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தி.ரமேஷ், மகாத்மா காந்தி வேடமணிந்தபடி வந்து மனுத் தாக்கல் செய்தார்.
புதன்கிழமை இரண்டாவது நாளாக மனுத் தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் முன், காவல் துணைக் கண்காணிப்பாளர் காந்தி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல், ஆட்சியர் அறைப் பகுதியிலும் போலீஸார் கண்காணிப்புப் பணி மேற்கொண்டிருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் யாரும் மனுத்தாக்கலுக்கு வரவில்லை. ஆட்சியர் மட்டுமின்றி, விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் அலுவலர்களும் வெளியே எங்கும் செல்லாமல் அறையிலேயே காத்திருக்க நேரிட்டது. இதுவரை மனுத் தாக்கல் செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். வியாழக்கிழமை ஓரிருவர் வருவதற்கு வாய்ப்புள்ளது. நாளை வெள்ளிக்கிழமை என்பதால், முக்கிய அரசியல் கட்சியினர் மனுத் தாக்கல் செய்வதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதற்கு பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். 26-ஆம் தேதியுடன் மனுத் தாக்கல் நிறைவு பெறுவதால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிகப்படியான மனுத் தாக்கல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT