சுயேச்சை வேட்பாளர் நூதன பிரசாரம்

மக்களின் ஆணைக்கிணங்க சுயேச்சை வேட்பாளராக நிற்க நான் ரெடி! ஒரு விரல் புரட்சி செய்ய நீங்கள் ரெடியா? என

மக்களின் ஆணைக்கிணங்க சுயேச்சை வேட்பாளராக நிற்க நான் ரெடி! ஒரு விரல் புரட்சி செய்ய நீங்கள் ரெடியா? என சுவரொட்டி ஒட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், நாமக்கல்லில் வேட்பாளர் ஒருவர் நூதன முறையில் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் செ. முத்துசாமி. இவர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதல்வராக இருந்தபோது  இருமுறை சட்டமேலவை உறுப்பினராக பதவி வகித்தவர்.
நாமக்கல்லைச் சேர்ந்த இவரது மகன் மு.நடராஜன் (52). நேதாஜி மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவராக உள்ளார். 
ரியல் எஸ்டேட், லாரித் தொழில் நடத்தி வரும் இவர், சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பாகவே, மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நாமக்கல் நகரம் முழுவதும், மக்களின் ஆணைக்கிணங்க சுயேச்சை வேட்பாளராக நிற்க, நான் ரெடி! வரும் மக்களவைத் தேர்தலில் ஜாதி, மதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் கட்சிகளைத் தவிர்த்து எனக்கு ஒரு விரல் புரட்சி செய்ய (ஓட்டுப்போட) நீங்கள் ரெடியா? என சுவரொட்டி அச்சடித்து ஒட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மக்கள் வரிப்பணத்தில் செய்யும் செலவு கணக்கை அந்த ஆண்டு இறுதியில், தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைப்பேன். அரசு ஒப்பந்த பணிகள் நடைபெறும் இடங்களில் அதன் விவரம் அடங்கிய பலகை, பணி முடியும் வரை வைக்கப்படும். பள்ளிகளில் உள்ள பதிவேடுகளில் ஜாதி என்ற காலத்தை நீக்க முயற்சிப்பேன் உள்ளிட்ட 10 அம்ச வாக்குறுதிகளை அச்சிட்டு துண்டு பிரசுரங்களை மக்களிடையே விநியோகம் செய்து வருகிறார். 
இது தொடர்பாக, மு.நடராஜனிடம் கேட்டபோது:
2009-இல் நேதாஜி மக்கள் இயக்கத்தைத் தொடங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். வெள்ளிக்கிழமை, எங்களது நேதாஜி மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்கிறேன் என்றார் அவர்.
சட்டமேலவை உறுப்பினராக பதவி வகித்த அவரது தந்தை செ. முத்துசாமியிடம் கேட்டபோது; எப்போதும் மக்கள் சேவையில் ஆர்வம் காட்டுவார். அந்த வகையில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கருதுகிறேன், என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com