நாமக்கல்

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அறிவுத்திறன் தேர்வு

DIN

திருச்செங்கோடு, சங்ககிரியில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் பொறியியல், கலை அறிவியல், பாரா மெடிக்கல் கல்லூரிகளில் இலவச கல்வி மற்றும் கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது.
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர். மு. கருணாநிதி, துணை மேலாண்மை இயக்குநர் டாக்டர். அர்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளர் டாக்டர். கிருபாநிதி ஆகியோர் இது பற்றி
கூறியதாவது:
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனம் பெண்களுக்கென பல் மருத்துவம், பார்மஸி, நர்சிங், ஹெல்த் இன்ஸ்பெக்டர், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலை அறிவியல், பொறியியல், மேலாண்மையியல், கல்வியியல் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என இன்று 23 ஆயிரம் மாணவிகளாக பல்கி பெருகி மிகப் பெரிய மகளிர் கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. 
மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மற்றும் கல்லூரியில் இளங்கலை மற்றும் டிப்ளமோ முடித்த மாணவிகள் அவர்களின் குடும்பப் பொருளாதார சூழ்நிலையால் உயர்கல்வியை தரமான கல்வி நிறுவனத்தில் தொடர முடியாமல் பள்ளி படிப்பையும், கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்புட ன் நின்று விடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் விவேகானந்தா அறிவுத்திறன் தேர்வு மூலம் ரூ. 3 கோடி மதிப்பில்  மாணவிகளுக்கு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரிகளில் இலவசக் கல்வி மற்றும் கட்டண சலுகை கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. 
நிகழ் கல்வியாண்டும் (2019 - 2020) இலவசக் கல்வி மற்றும் கட்டண சலுகைக்கான "விவேகானந்தா அறிவுத்திறன் தேர்வு - 2019' நடைபெற உள்ளது. அத் தேர்வு எழுதிய மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பெறும் மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள்.
சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவிகள், பட்டயம் முடித்த மாணவிகள் மற்றும் இளங்கலை அறிவியல் மாணவிகளுக்கு  வரும் 24ஆம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. மேலும் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பிளஸ் 2 மாணவிகள், பட்டய மாணவிகள் மற்றும் இளங்கலை அறிவியல் மாணவிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி  சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.
ஏப்ரல் 6, 7ஆம் தேதிகளி 12 மாவட்டங்களில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் இத் தேர்வானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இத் தேர்வு எழுத பிளஸ் 2 பொதுத்தேர்வு, டிப்ளமா இறுதியாண்டு தேர்வு, இளங்கலை இறுதி பருவத்தேர்வு எழுதிய மற்றும் எழுத இருக்கும் அனைத்து மாணவிகளும் தகுதியுடையவர் ஆவர். கேள்விகள் அனைத்தும் மாணவிகள் தாங்கள் இறுதியாண்டில் படித்த பாடப் பகுதிகளில் இருந்து மட்டுமே சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும்.
 தகுதி பெறும் மாணவிகளுக்கு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரிகளில் படிப்பு காலம் முடியும் வரை இலவசக் கல்வி மற்றும் கட்டண சலுகை வழங்கப்படும்.
2016-2017 கல்வியாண்டில் 1,805 மாணவிகளுக்கு சுமார் ரூ. 3. 81 கோடியும்,  2017-2018 கல்வியாண்டில் 1,911 மாணவிகளுக்கு சுமார் ரூ. 3.89 கோடியும், 2018-2019 கல்வியாண்டில் 1,952 மாணவிகளுக்கு சுமார் ரூ. 3.92 கோடியும் இலவச கல்வி உதவி வழங்கப்பட்டுள்ளது.  தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவிகள்  தேர்வு நடைபெறும் அன்று காலை 9 மணிக்குள் தங்களது பெயரினை எங்கள் கல்வி நிறுவனத்தில் நேரில் பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம். 
முக்கிய ஊர்களின் பேருந்து நிலையம் அருகிலிருந்து பெற்றோர், மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்ல காலை 7.30 மணிக்கு இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.  தேர்வு எழுதும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04288 - 234670 ,71,72,73,  94437 34670, 99655 34670 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT