டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனைக்கு திடீர் கட்டுப்பாடு

மக்களவைத் தேர்தலையொட்டி, அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில்,  2 எண்ணிக்கைக்கு மேல் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில்,  2 எண்ணிக்கைக்கு மேல் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு மதுபானங்களை இனாமாக வழங்கி வாக்குச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது.
இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 7 ஆயிரம் அரசு மதுபானக் கடைகளிலும் மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 2 மதுபானங்களுக்கு மேல் விநியோகம் செய்யக்கூடாது. மொத்தமாக மதுபானம் வழங்கக்கூடாது. தினசரி விற்பனையை தவறாமல் பதிவு செய்து, மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். 
அரசியல் கட்சிகள் சார்பில், வாக்காளர்களுக்கு மதுவுக்கான டோக்கன் வழங்கி, அவர்கள் கடைகளில் வந்து கொடுத்தால் மதுபானங்கள் வழங்கக்கூடாது. மீறி விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு மதுபானக் கடைகளில் உள்ள கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட அரசு மதுபான நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: மாவட்டத்தில் 250 மதுபானக் கடைகள் வரையில் உள்ளன. வழக்கமாக, ஒரு நபருக்கு 10 எண்ணிக்கையில் மது வழங்கலாம் என்ற விதி உள்ளது. தேர்தலையொட்டி அந்த எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கிறோம். 
தற்போதைய சூழலில், தேர்தல் ஆணையம் கூறியிருப்பது, டோக்கன் கொண்டு வந்து  மது கேட்கும் நபர்களுக்கு வழங்கக்கூடாது. அதேபோல், அரசியல் கட்சியினர் மொத்தமாக கேட்டாலும் மது வழங்கக்கூடாது. விற்பனை தொடர்பான தகவல்களை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு நடத்தினால் காண்பிக்க வேண்டும் என கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல்  மது விற்பனை இலக்கு என்பதெல்லாம் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com