"சிண்டிகேட் வங்கி அடுத்த 6 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டும்'

சிண்டிகேட் வங்கி அடுத்த 6 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டி, நாட்டின் 6-ஆவது பெரிய வங்கி என்ற

சிண்டிகேட் வங்கி அடுத்த 6 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டி, நாட்டின் 6-ஆவது பெரிய வங்கி என்ற அந்தஸ்தை பெற உள்ளது என வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சிண்டிகேட் வங்கிக்கு நாடு முழுவதும் 4,000 கிளைகளும், 4,200 ஏ.டி.எம். மையங்களும் உள்ளன. கடந்த 93 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த வங்கி, அடுத்த 6 மாதங்களில் பெரிய வங்கி என்ற அந்தஸ்தை பெற உள்ளது.
சுமார் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் உள்ள வங்கிகள் பெரிய வங்கி அந்தஸ்துடன் செயல்படுகின்றன. அந்த வகையில், சிண்டிகேட் வங்கியின் வருவாய் ரூ.4.80 லட்சமாக உள்ளது. அடுத்த 6 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடியாக உயரும். அதன்படி, இந்தியாவில் பெரிய வங்கிகளின் பட்டியில் 6-ஆவது இடத்தில் சிண்டிகேட் வங்கி இடம்பெறும்.
தற்போது அடுத்தக்கட்ட மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். இதுபோன்று சுமார் 100 கூட்டங்களை ஒன்றரை மாதத்தில் நடத்திட உள்ளோம். மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். மேலும், ஜிஎஸ்டி வரி அமலாக்கத்துக்கு பிறகு, சிறிது தொய்வில் இருந்த சிறு, குறு நிறுவனங்கள் தற்போது வளர்ச்சி கண்டு வருகின்றன. மேலும், சிறு, குறு நிறுவனங்களின் தொழில்வளர்ச்சிக்கு போதிய உதவிகளை செய்து வருகிறோம். சிண்டிகேட் வங்கியைப் பொருத்த வரையில் வாராக்கடன் 6.83 சதவீதமாக உள்ளது. சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வாராக் கடனாக உள்ளது. வாராக்கடனை வசூலிக்க புதிய நடவடிக்கையாக தனி துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பொது மேலாளர்கள் நியமிக்கப்பட்டு, நாடு முழுவதும் 1,200 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.
பேட்டியின் போது, சென்னை மண்டல பொது மேலாளர் எம்.பிரசாத், சேலம் பிராந்திய மேலாளர் ஆர்.பொன்ராஜ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com