விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் நிறுவுவதை அரசு கைவிட வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் நிறுவுவதை அரசு கைவிட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாள


விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் நிறுவுவதை அரசு கைவிட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் டி.கே.எஸ்.ரமேஷ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மண்டல இளைஞரணி செயலாளர் எம்.விஜயக்குமார் வரவேற்றுப் பேசினார்.சிறப்பு விருந்தினராக கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. நிலங்களின் மதிப்பைக் குறைக்கவும், அபகரிக்கவும் நினைப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மேலும், உயர்மின் அழுத்த கோபுரங்களை நடுவதால் 10 ஏக்கர் நிலம் வீணாகிப் போகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். நிலங்கள் விலை போவதில்லை. எனவே, உயர்மின் அழுத்த கோபுரங்கள் நிறுவுவதை அரசு நிறுத்த வேண்டும்.
கஜா புயல் காரணமாக நிலங்களில் நடப்பட்டிருந்த 1.5 லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் இன்னும் மின் இணைப்புகள் கிடைக்காமல் கிராமங்கள் இருளில் மிதக்கின்றன. அதனால், மின் இணைப்புகளைத் தரைவழிக் குழாய் மூலம் கொண்டு செல்ல வேண்டும். உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொங்கு மண்டலத்தில் 8 இடங்களில் காத்திருப்புப் போராட்டம் வரும் 17 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அந்த மாவட்டங்களில் இருந்து அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம் அமைத்துச் செயல்படவேண்டும். மேலும், வசிஷ்ட நதி இணைப்புக்கு திட்டங்கள் தீட்டி நிறைவேற்றிட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஏ.கே.ராமசாமி, மாவட்ட பொருளாளர் எம்.ஈஸ்வரன், மாவட்ட இளைஞரணி என்.செந்தில், மாவட்டதலைமை நிலைய செயலாளர் ஆர்பிஎஸ். சேகர், மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் வி.ராமகிருஷ்ணன், நகரச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், நரசிங்கபுரம் நகரச் செயலாளர் என்.முனிராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் பி.நந்தினி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஈ.சகுந்தலா, மகளிர் அணித் தலைவி கே.பி.ரஞ்சிதம், ஒன்றியச் செயலாளர் பி.சிவசங்கர், மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, விவசாய அணி செயலாளர் டி.எஸ்.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட தொண்டரணி செயலாளர் ஈ.துரை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com