அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த பதிவு செய்ய நவ.16 வரை கால நீட்டிப்பு

சேலம்  மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு

சேலம்  மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுவதற்கான கால அவகாசம் நவம்பர் 16 ஆம் தேதி வரை நீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது.
தமிழக  அரசால்,  அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் அமையும்  தனித்த மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்திட நவம்பர் 3 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 
அதைத் தொடர்ந்து நவம்பர் 3 ஆம் தேதி முதல் நவ.6 ஆம் தேதி வரை விடுமுறை காலமாக இருந்ததால் பொதுமக்களிடமிருந்து அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு கால நீட்டிப்பு வழங்கக் கோரி, கோரிக்கைகள் வரப்பெற்றன.
இதன்  அடிப்படையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக  இணையதளம் வாயிலாக பதிவு செய்ய நவம்பர் 12 ஆம் தேதி முதல் நவ.16 ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,  தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவான நவ.12  முதல் நவ.16 ஆம் தேதி வரைக்குள், சேலம் மாநகராட்சியில் 4 மண்டலத்துக்குள்பட்ட  பகுதிகளில் 2016 அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்பு கிரயம் பெற்றுள்ள அனுமதியற்ற மனைகளின் உரிமையாளர்கள் ரூ. 500-ஐ, ‌w‌w‌w.‌t‌n‌l​a‌y‌o‌u‌t‌r‌e‌g.‌i‌n  என்ற இணையதள முகவரியில் செலுத்த
வேண்டும்.
மேலும் பதிவு செய்த ரசீதை மனையின் கிரையப் பத்திர நகல் (20.10.2016- க்கு முன் கிரயம்), நடப்பு வரையிலான வில்லங்கச் சான்றிதழ் நகல், பட்டா நகல் நகர நில அளவை வரைபடம்  (டி.எஸ்.எல்.ஆர்.)  நகல், மனை அமையும் மனைப் பிரிவின் வரைபடம் - 5 நகல்கள், அடையாள அட்டை (ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை).
ஆவணங்களுடன் இணைத்து, சேலம் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில்,  மூன்றாம் தளத்தில் உள்ள நகரமைப்புப் பிரிவில் விண்ணப்பித்து, தங்களது மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று சேலம் மாநகராட்சி  ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com