சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புப் போலீஸார் புதன்கிழமை

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புப் போலீஸார் புதன்கிழமை பிற்பகல் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை  இரவு வரை நீடித்தது. 
சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து  அலுவலகத்துக்கு  புதன்கிழமை பிற்பகலில் சாதாரண உடையில் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பூபதிராஜன்,  தங்கமணி, ரவிச்சந்திரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் வந்தனர். அவர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை  தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து திடீர் சோதனை நடத்தினர்.   அப்போது, அலுவலக வளாகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.  உரிய ஆதாரங்களை அளித்தவர்களை வெளியே அனுப்பிவைத்தனர்.  இடைத்தரகர்கள் எனக் கண்டறியப்பட்ட 25-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்த பணத்துக்கான  ஆதாரங்களை ஆய்வு செய்தனர்.  லாரிகளுக்கு காலாண்டு வரி செலுத்துவதற்கு புதன்கிழமை கடைசி நாள் என்பதாலும்,  சுபமுகூர்த்த தினம் என்பதாலும்  அதிகமான நபர்கள் வரி செலுத்தும் மையத்தில் இருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
  விசாரணையில் இருந்தவர்கள் இயற்கை  உபாதைகளை கழிக்கவும், உணவுக்காகவும்  போலீஸ் பாதுகாப்புடன் குழுவாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.  இதனையடுத்து இரவு முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.  இடைத்தரகர்கள் என லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கண்டறிப்பட்டவர்கள் வைத்திருந்த பணம் சங்ககிரி துணை வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலையில்  பறிமுதல் செய்யப்பட்டது.  இந்தச் சோதனையின் போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து,  மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஸ்வநாதன், தனபால் மற்றும் ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com