சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம்: மீண்டும் 100 அடியாக உயர்வு

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை  நடப்பு ஆண்டில்  மூன்றாவது முறையாக 100 அடியாக உயர்ந்தது.
நடப்பு  ஆண்டில் முதன் முதலாக ஜூலை 17-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100  அடியாக உயர்ந்தது.  இதையடுத்து,  ஜூலை 27-ஆம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டியது.  அதற்கு பிறகு காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் மழையின் அளவு குறைந்ததால்,  கடந்த 30-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது.  பின்னர்,  காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. 
 இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை (நவ.9) மீண்டும் 100 அடியாக உயர்ந்தது.   பின்னர் பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்பட்டதால்,  திங்கள்கிழமை (நவ.12) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது.  தற்போது மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு  நொடிக்கு 1000 கன அடியாகக் குறைக்கப்பட்டதால்,  புதன்கிழமை  காலை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக  நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில்,  புதன்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 100.02  அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 4,192 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1,000 கன அடி வீதமும்,  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு 64.86 டி.எம்.சி.யாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT