கார்த்திகை மாதம் தொடக்கம்: மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் தொடங்கியதை  முன்னிட்டு, சேலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை  முன்னிட்டு, சேலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கார்த்திகை முதல் மார்கழி மாதம் கடைசி வாரம் வரை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடிக் கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் தேர்நிலையம் ராஜகணபதி கோயில்,  சுகவனேசுவரர் கோயில், சித்தேஸ்வரா காளியம்மன் கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோயில், சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில், டவுன் ரயில் நிலைய ஐயப்பன்,  ஊத்துமலை முருகன் கோயில் உள்ளிட்ட சிவன், அம்மன்,  விநாயகர், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com