பனை மரங்களை பாதுகாக்க முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பு

சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு சென்ற  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம்,     பனை மரங்களை பாதுகாக்கக் கோரி சமூக ஆர்வலர் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.

சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு சென்ற  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம்,     பனை மரங்களை பாதுகாக்கக் கோரி சமூக ஆர்வலர் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.கே.செல்வரத்னம் முதல்வரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழர்களின் அடையாளமாகவும்,   விவசாயிகளின் அரணாகவும் விளங்கும் நமது மாநில மரமான  பனை மரம் இன்றைய சூழலில் அதிகளவில் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு இடைத்தரகர்களால் எரிபொருளாக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாள்தோறும்  பனைமரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com