வெள்ளிக்கிழமை 14 டிசம்பர் 2018

கலைத் திருவிழாவில் சாம்பியன் பட்டம்: கோகுலம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

DIN | Published: 19th November 2018 04:03 AM


பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கல்வி கலைத் திருவிழாவில் 35 பரிசுகள் மற்றும் சாம்பியன் பட்டம் வென்ற பழனியாபுரம் கோகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
வாழப்பாடி அடுத்த பழனியாபுரத்தில் கோகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி கே. நடராஜன், அவரது மனைவி நல்லாசிரியர் விருது பெற்ற முதல்வர் தமிழரசி ஆகியோர் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை தேர்வு செய்து கிராமிய கலைகளை கற்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற கல்வி கலைத் திருவிழாவில், பேச்சு, கட்டுரை, நடனம், நாடகம், குரலிசை, வில்லுப்பாட்டு, கரகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, 35 முதல் பரிசுகள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர். மேலும், மதுரையில் விரைவில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவியர், பயிற்சி அளித்த ஆசிரியர்குழு மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

 

More from the section

ரயில் வழித்தடம் மின்மயம்: கரூர்-சேலம் பயணிகள் ரயில்
இன்று முதல் 10 நாள்களுக்கு ரத்து

கர்நாடகத்தில் இருந்து கேரளம் சென்ற சொகுசு பேருந்தில் தீ
"செல்வி மெஸ்' கிளை திறப்பு


சிறுமலர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை