ஆத்தூர் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்

ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில், திங்கள்கிழமை பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து உதவி வேளாண் அலுவலர் பொ.வேல்முருகன் விளக்கினார்.

ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில், திங்கள்கிழமை பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து உதவி வேளாண் அலுவலர் பொ.வேல்முருகன் விளக்கினார்.
 சேலம் மாவட்டம், ஆத்தூர் வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலர் பொ.வேல்முருகன் பேசியது: 1966-ஆம் ஆண்டு பசுமை புரட்சிக்கு வித்திட்ட இந்திய அரசாங்கம், 2015-ஆம் ஆண்டு மருந்து உரம் பயன்படுத்தாத விளைபொருள்களை தயாரித்து விவசாயிகளே நஞ்சில்லா பொருள்களை விற்கும் வண்ணம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் தொகுப்புகளில் 1,495 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் வேளாண் துறையில் வேளாண் பயிர்களான பாரம்பரிய நெல், சிறுதானியங்களான சாமை, குதிரைவாலி, திணை, வரகு மற்றும் ராகி ஆகிய பயிர்களில் முதல் ஆண்டு 42 தொகுப்புகளும், இரண்டாம் ஆண்டு 61 தொகுப்புகளும், மூன்றாம் ஆண்டு 150 தொகுப்புகளும் செயல்படுத்தப்பட்டு 5,060 ஹெக்டேர் நிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு தோட்டக்கலைத் துறையில் தோட்டக்கலைப் பயிர்களான மஞ்சள், வாழை, மிளகு, மா போன்ற பயிர்களில் 50 தொகுப்புகளும், இரண்டாம் ஆண்டு 62 தொகுப்புகளும், மூன்றாம் ஆண்டு 50 தொகுப்புகளும் செயல்படுத்தப்பட்டு 3,240 ஹெக்டேர் நிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு முதல் ஆண்டில் இடுபொருள்கள் (நவதானியம், வேஸ்ட் டிகம்போசர், வேப்பம்புண்ணாக்கு, திரவ உயிர் உரங்கள், திரவஉயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், தெளிப்பான், டிரம் ஆகியவைகள் வாங்க) மற்றும் நிலத்தினை அங்ககத் தன்மை கொண்டு வருவதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,858, இரண்டாம் ஆண்டில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,000, மூன்றாம் ஆண்டில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,644 வழங்கப்படுகிறது. விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய இயந்திரங்கள் வாங்கவும், பொருள்களை எடுத்துச்செல்ல வாகனம் வாங்கவும், பேக்கிங் செய்திடவும் பத்து லட்சம் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 15 சதவீத பிரீமியத்துடன் ஒரே மாதிரியான விலையுடன் அங்கக குழு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வேளாண் பொருள்களை விற்பனை செய்ய டாப் (பஞட) தமிழ்நாடு ஆர்கானிக் புராடக்ட்ஸ் என்ற பெயரில் ஒரே மாதிரியான விற்பனை விலையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.
 பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com