தினசரி குடிநீர் வழங்கக் கோரி மனு

சங்ககிரி பேரூராட்சி மற்றும்  22 ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு தினசரி காவிரி குடிநீர் வழங்கக் கோரி,

சங்ககிரி பேரூராட்சி மற்றும்  22 ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு தினசரி காவிரி குடிநீர் வழங்கக் கோரி, சேலம் மாவட்ட உபயோகிப்பாளர் உரிமைக் கழகத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. 
சேலம் மாவட்ட உபயோகிப்பாளர் உரிமைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் சி.கோ.இளமுருகன், ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை  மனு: புள்ளாகவுண்டம்பட்டி நீரேற்று நிலையம் மூலம் சங்ககிரி பேரூராட்சி மற்றும் 22 ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் குடிநீரை வீட்டில் உள்ள பாத்திரங்கள், தொட்டிகள்  மற்றும் கேன்களில் சேமித்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சேமித்து வைப்பதால் டெங்கு, வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப் புழுக்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, புள்ளாகவுண்டம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து சங்ககிரி பேரூராட்சி வரை உள்ள குடிநீர் பாதைகளை ஆய்வு செய்து, அதில் முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டித்து, சங்ககிரி பேரூராட்சி மற்றும் 22 ஊராட்சி பகுதிகளுக்கு சீரான குடிநீர் தினசரி விநியோகம் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com