சேலம்

காவிரிக் கரையில் செங்கரும்புகள் அறுவடை தொடக்கம்: வடமாநில வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல்

DIN

காவிரிக் கரைப் பகுதியில் நிகழாண்டில் செங்கரும்பு அறுவடை தொடங்கியுள்ளது. மேலும்,  இப்பகுதியில் முகாமிட்டுள்ள வடமாநில மொத்த வியாபாரிகள் அதிகஅளவில் கரும்புகளை கொள்முதல்  செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை  அடுத்த பூலாம்பட்டி,  கூடக்கல், குப்பனூர், கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரிக் கரைப் பகுதியில் அதிக அளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது.  இப்பகுதியில் ஆண்டு முழுவதும் போதிய நீர்வளம் இருந்து வருவதால், இங்கும் விளையும் கரும்புகள் உயரத்துடனும்,  சாறு நிறைந்ததாகவும் காணப்படுகிறது. குறைவான உப்புத் தன்மைக் கொண்ட மண்வளம் நிறைந்த இப்பகுதி வயல்களில் விளையும் கரும்புகள் கூடுதலான ருசியுடன்  இருப்பதால் சந்தையில் கூடுதல் விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில்  கஜா புயலால்  தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில்  கரும்பு தோட்டங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளதால்,  கடந்த காலங்களில் அப்பகுதியில் கரும்பு கொள்முதல் செய்து வந்த வடமாநில வியாபாரிகள் தற்போது பூலாம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் முகாமிட்டு  அதிக அளவில் கரும்புகளை கொள்முதல் செய்து வருகின்றனர். 
மேலும், நிகழாண்டில் மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்காக தண்ணீர்  தடையின்றி கிடைத்து வரும் நிலையில், காவிரிக் கரைப் பகுதி விவசாயிகள் முன்னதாகவே கரும்பு அறுவடையைத் தொடங்கியுள்ளனர். 20 கரும்புகள் அடங்கிய கட்டு ரூ. 300 முதல் ரூ.400வரையில் விலை போவதாகவும், மொத்த கொள்முதல் செய்து வரும் வடமாநில வியாபாரிகள், இப்பகுதியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை அதிகளவில் சூரத், புணே,  மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார். தொடர்ந்து இப்பகுதியில் ஜனவரி மாதம் வரை கரும்பு அறுவடை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT