சர்வதேச கை கழுவும் தின விழிப்புணர்வு

உலக கை கழுவும் தினத்தையொட்டி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை கைகளை


உலக கை கழுவும் தினத்தையொட்டி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை கைகளை சுத்தமாக கழுவி பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கே.முருகையன் தலைமையில், வட்டாட்சியர் கே.அருள்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
தம்மம்பட்டியில்...
செந்தாரப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் துரை ரமேஷ், பள்ளித் தலைமை ஆசிரியர், செயல் அலுவலர் (பொ) சா.அப்துல்சாதிக்பாஷா, சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு, பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் நகராட்சியில் மண்டல நிர்வாக இயக்குநர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அ.மோகன், துப்புரவு அலுவலர் மூர்த்தி, நகராட்சி உதவி பொறியாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதே போல் கூலமேடு ஊராட்சியிலும் அனுசரிக்கப்பட்டது.
ஆட்டையாம்பட்டியில்...
இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது மக்கள் கூடும் பகுதியான பேருந்து நிறுத்தம், தினசரி காய்கறி மார்க்கெட், அரசு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது.
அய்யம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இதேபோல், அரியானூரில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
வாழப்பாடியில்...
வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கமலாலயம் காப்பகத்தில் தும்பல் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், கைகள் கழுவும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கமளித்தார்.
வாழப்பாடி அண்ணாநகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளித் தலைமையாசிரியை ஷபீராபானு தலைமையிலும், பேளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் திருஞானகணேசன் தலைமையிலும், உருது தொடக்கப் பள்ளியில் பள்ளித் தலைமையாசியர் செல்வம் தலைமையிலும், மாமாஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் புஷ்பராணி தலைமையிலும் நடைபெற்றது.
மேட்டூரில்...
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 3,115 குழந்தைகளுக்கு வளர்ச்சி திட்ட அலுவலர் இன்பவள்ளி தலைமையில் கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளவரசி, உள்தங்கும் மருத்துவ அலுவலர் டாக்டர் சுகந்தி ஆகியோர் தலைமையில்
இந்நிகழச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com