திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

கருக்கல்வாடியில் தீர்த்தக்குட ஊர்வலம்

By  ஓமலூர்,| DIN | Published: 11th September 2018 09:43 AM

தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கிராமத்தில் புனரமைக்கப்பட்டுள்ள ஐந்து கோயில்களின் கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட தீர்த்தக் குட ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 ஓமலூர் அருகேயுள்ள கருக்கல்வாடி கிராமத்தில் பல நூறாண்டுகள் பழமையான ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ பெரிய கருமாரியம்மன், ஸ்ரீ கற்பகவள்ளி சமேத கார்கீஸ்வரப் பெருமான், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிய பெருமாள்ஆகிய ஐந்து கோயில்கள் உள்ளன.
 பல நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோயில்களில் கர்பகிரகம்,அர்த்தமண்டபம், மஹா மண்டபம்ஆகியவையும், பெரிய கருமாரியம்மனுக்கு மிகவும் பிரம்மாண்டமான கோயிலும் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த கோயில்களின் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து கங்கை, யமுனை மற்றும் காவிரி ஆகிய ஆறுகளில் இருந்து எடுத்து வந்த புனித நீரைஆயிரக்கணக்கான பொதுமக்கள் யானை,குதிரை, காளை,பசு உள்ளிட்ட பரிவாரங்களுடன் செண்டை மேளம் முழங்க சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த புனித நீர் ஊர்வலத்தில் சுமார் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீரும், முளைப்பாரியும் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, பிரம்மாண்டமான யாக சாலையில் மூன்றுகால யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
 இந்த கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து நாள் முழுவதும் கோயிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது.
 
 
 

More from the section


மேட்டூர் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனைக் கூட்டம்
கல்வெட்டு படிக்க பயிற்சி
சங்ககிரியை நெகிழிப் பை இல்லா நகரமாக்க முயற்சி
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம்: 22,115 விண்ணப்பங்கள் அளிப்பு