புதன்கிழமை 17 அக்டோபர் 2018

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை ஸ்ரீப்ரியா

DIN | Published: 11th September 2018 09:30 AM

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைமை செயற்குழு உறுப்பினரும்,  நடிகையுமான ஸ்ரீப்ரியா தெரிவித்தார்.
சேலத்தில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட  அலுவலகத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை செயற்குழு உறுப்பினரும்,  நடிகையுமான ஸ்ரீப்ரியா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.  பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.  நிகழ்ச்சியில், உயர்நிலைக் குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீப்ரியா  செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால்,  தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.  அவர் மட்டுமே பாதுகாப்பாக இருக்கலாம். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுத்த பிறகு பதில் கூறுகிறோம்.
மேலும், பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்துள்ளது.  பாஜகவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த மாணவி சோபியாவின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டதால், மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும்.  இந்த விஷயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவசரப்பட்டிருக்காமல் தாயன்போடு அணுகி இருக்கலாம் என்றார்.

More from the section

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
சேலத்தில் இளம்பெண் மீது அமிலம் வீச்சு
சர்வதேச கை கழுவும் தின விழிப்புணர்வு
உணவு விநியோகத்தை சீராக்கினால் பஞ்சம் இல்லாத உலகம் உருவாகும்: துணை வேந்தர் பொ.குழந்தைவேல்
தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பாராட்டு