புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

DIN | Published: 12th September 2018 07:50 AM

ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் எல்ஆர்சி நகரில் உள்ள காசிலிங்கம் மகன் செந்தில்குமார் (44) வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, வாகன புதுப்பித்தலுக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பேசி ஆத்தூரை சேர்ந்த செந்தில்குமார் மூலம் பரிவர்த்தனை நடைபெற்றதாம். இதனையடுத்து புகாரின் பேரில் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 இந்நிலையில், ஆத்தூரில் இருக்கும் செந்தில்குமார் வீட்டுக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை வந்தவர்கள் நள்ளிரவு வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுக்கு, செந்தில்குமார் லஞ்சம் வாங்கி கொடுத்ததாகவும், அவரது வீட்டில் ரூ.35 லட்சம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், செந்தில்குமார் வீட்டில் சுமார் 100 பவுனுக்கும் மேல் நகைகள், 15 வங்கிக் கணக்குப் புத்தகத்தை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் 2006-இல் பாபு சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியபோது செந்தில்குமார் வீட்டில் இருந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

More from the section

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம்: டி.ஆர். பச்சமுத்து


சேலத்தில் இன்று அதிமுக கண்டன பொதுக்கூட்டம்: முதல்வர் பங்கேற்பு

வேளாண் அலுவலர் தற்கொலை
நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரை
பூலாம்பட்டி பகுதியில் நவீன முறை நடவுபணிகள் தீவிரம்