புதன்கிழமை 21 நவம்பர் 2018

கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியளிப்பு

DIN | Published: 12th September 2018 07:51 AM

கருணாநிதி மறைந்த அதிர்ச்சி தகவலை கேட்டு நரசிங்கபுரத்தில் திமுகவினர் சிலர் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதி அளிப்பு நிகழ்ச்சி சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கூலமேடு செல்லமுத்து (55), கல்லாநத்தம் மெய்யழகன் (60) ஆகியோரது குடும்பத்தினருக்கு நிதி அளிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் ஆத்தூர் நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம், நரசிங்கபுரம் நகர செயலாளர் என்.பி.வேல்முருகன், துணை செயலாளர் எஸ்.மனோகர், பொருளாளர் ரமேஷ், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் வி.செழியன், பாரப்பட்டி சுரேஷ்குமார்,கல்லாநத்தம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சேகர்,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கு.சின்னதுரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

More from the section

பா.ம.க. மாவட்ட செயற்குழுக் கூட்டம்
தினசரி குடிநீர் வழங்கக் கோரி மனு
கூட்டுப் பண்ணையம் பயிற்சி
விழிப்புணர்வு மனிதச் சங்கிலி


கடம்பூரில் கால்நடை மருந்தகம் திறப்பு