திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

சுகவனேஸ்வரர் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

DIN | Published: 12th September 2018 07:52 AM

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
சேலம் டவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பாலாலயம் அமைத்து உற்சவர் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் திடீரென வந்து ஆய்வு செய்தார். நீதிபதிகள் தங்கமணி கணேசன், ரவி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் தங்கத்தேர் வைக்கப்பட்டுள்ள அறையைத் திறந்து மாவட்ட நீதிபதி மோகன்ராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் கோயில் குருக்களிடம் சோமஸ்கந்தர் சிலை உள்ளதா என கேட்டறிந்தார். இதன் பின்னர் கோயில் வெளியே வந்து அங்கு திரண்டிருந்த  பக்தர்களிடம் கோயிலுக்கு வேறென்ன வசதிகள் தேவை, கோயிலில் சுவாமியை வணங்க சிரமம் உள்ளதா என கேட்டறிந்தார். அப்போது பக்தர்கள் சிலர் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதன் பின்னர் கோயில் குருக்கள் சிலரை அழைத்து அவர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் அமைக்கப்பட்டு உற்சவர் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அவர் சென்றார். 
அங்கு கோயில் குருக்களிடம் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீதிபதி கோயில் முழுவதும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

More from the section

லாரியை கடத்தி டயர்களை திருடிய மர்ம நபர்கள்
சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ விழா
வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் வால்வுகளை திருடிய இருவர் கைது
கல்குவாரி குட்டையில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் சாவு
பசுமை வழிச் சாலைக்கு மலைப் பகுதியில் மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு