செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

DIN | Published: 12th September 2018 07:49 AM

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ரிக் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரிக் லாரிகளை நிறுத்தி வைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் 600 ரிக் லாரிகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.அதைத் தொடர்ந்து ரிக் லாரி உரிமையாளர்கள், முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலர் சேதுராமகிருஷ்ணன், பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

More from the section

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஐநூறு ரூபாய் நோட்டுகளை எரித்தோம்: ரயில் கொள்ளையர் வாக்குமூலம்
சேலம் புத்தகத் திருவிழா: மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக் கல்வி உபகரணங்கள்!
மாணவி பாலியல் வழக்கில் தேடப்பட்ட இளைஞர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
சாலை விபத்தில் ரௌடி உள்பட 2 பேர் சாவு
கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக் கோரி மனு