தேவூர் அருகே பொன்னுசமுத்திரம் ஏரிக்கு நீர் செல்லும் பாதையை  செப்பனிட கோரிக்கை

தேவூர் அருகே காவேரிபட்டி அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள பொன்னுசமுத்திரம் ஏரிக்கு நீர் செல்லும்

தேவூர் அருகே காவேரிபட்டி அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள பொன்னுசமுத்திரம் ஏரிக்கு நீர் செல்லும் வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அதை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிபட்டி அக்ரஹாரம் கிராமத்தில் ரெட்டிபாளையம் முதல் தேவூர் செல்லும் சாலையையொட்டி ஊராட்சிக்குச் சொந்தமான பொன்னுசமுத்திரம் ஏரி உள்ளன.
அந்த ஏரிக்குச் செல்லும் நீர் வழி பாதைகள் துண்டிக்கப்பட்டு மழை நீரும், கிழக்குக் கரை கால்வாய் வடிநீரும் செல்ல முடியாமல் ஏரி வறண்டு கிடக்கின்றன.
ஏரிக்கு நீர்வரத்து குறைவானதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வருகின்றன. மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பால் ஏரியின் பரப்பரளவும் குறைந்து வருகின்றது.
எனவே பொன்னுசமுத்திரம் ஏரிக்கு நீர் செல்லும் பாதையை செப்பனிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் மற்றும் ஊரகவளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவேரிப்பட்டி அக்ரஹார கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com