பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம்: சேலம் மாவட்டத்தில் 3.77 லட்சம் பேர் சேர்ப்பு

பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 3.77 லட்சம் பேர் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளதாக 

பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 3.77 லட்சம் பேர் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் ஓமலூரில் தெரிவித்தார்.
பிரதமரின் விபத்து காப்பீடுத் திட்டம் ஆண்டுக்கு வெறும் ரூ. 12 மட்டுமே பிரீமியம் கொண்டதாகும். அனைத்து வங்கிகளிலும் தங்கள் வாடிக்கையாளர்களின் பெயர்களை இத்திட்டத்தில் இணைத்துள்ளன. ஓமலூரில் அனைத்து வங்கிகளிலும் இத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் மூன்று லட்சத்து 77 ஆயிரத்து 439 பேர் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் தெரிவித்தார். இதுகுறித்து மேலும், அவர் கூறியதாவது: 
காப்பீடு செய்தவர் விபத்தினால் இறக்க  நேரிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதற்கென, அவரின் இறப்புச்சான்றிதழை வழங்கினால், அடுத்த 15 தினங்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு இத்  திட்டத்தின் கீழ்  இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
குடும்பத்தில் வருவாய் ஈட்டக்கூடிய நபர் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், அந்தக் குடும்பம் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இதுபோன்ற நேரங்களில் இத் திட்டம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக அமையும்.
ஓமலூரைப் பொறுத்தவரை வேலகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் விபத்தினால் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தாரும்,  காடையாம்பட்டி அருகே முள்ளுசெட்டிப்பட்டி விவசாய கூலித் தொழிலாளி பழனிசாமி இறந்ததால் அவரது குடும்பத்தாரும், வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தாரும்  இத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.
18 வயது முதல் 70 வயது வரையுள்ளவர்களுக்காக செயல்படுத்தப்படும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில், சம்பந்தப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிட்டால் 15 நாள்களுக்குள் 2 லட்ச இழப்பீட்டுத் தொகை வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com