சின்ன திருப்பதி கோயிலில்  ரூ.5.31 லட்சம் உண்டியல் வசூல்

ஓமலூர் அருகேயுள்ள சின்னத் திருப்பதி வெங்கட்டரமண சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டது. 

ஓமலூர் அருகேயுள்ள சின்னத் திருப்பதி வெங்கட்டரமண சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டது. 
ஓமலூர் அருகேயுள்ள காருவள்ளி ஊராட்சி சின்னத் திருப்பதியில் பழமையான அருள்மிகு பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புரட்டாசி மாதத்தில் அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் இந்தக் கோயில் சுற்றுலாத் தலம் என்பதால், சேலம் மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி,பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், இந்தக் கோயிலில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவது வழக்கம். மேலும், தற்போது புரட்டாசி மாதம் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளும் விசேஷ பூஜைகள் நடத்தப்படும். மேலும்,தினம்தோறும் மூன்றுகால பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்படுவதுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். தொடர்ந்து திருக்கல்யாணம், தேரோட்டமும் நடத்தப்படும். அதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். கூட்டம் அதிகமாக வரும் என்பதால் தற்போது இரண்டு மாதங்களாக பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் எண்ணப்பட்டது. முன்னதாக இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் கோயிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டன.தொடர்ந்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் சேலம் சேவா சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை தனித்தனியாகப் பிரித்து எடுத்து, எண்ணினர்.இதில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 5 லட்சத்து 31ஆயிரம் ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்தத் தொகையை அறநிலையத் துறை அதிகாரிகள் அறநிலையத் துறையின் வங்கிக் கணக்கில் செலுத்தினர். மேலும், புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் அதிகமாக காணிக்கை செலுத்துவார்கள் என்பதால், காணிக்கை வசூல் அதிகமாகக் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com