சேலம்

பசுமை வழிச் சாலைக்கு மலைப் பகுதியில் மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

DIN

சேலம் அருகே பசுமை வழிச் சாலைக்காக ஜருகுமலை பகுதியில் மண் பரிசோதனை பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து, தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
சேலம் - சென்னை இடையே 277 கி.மீட்டரில் பசுமை வழிச் சாலை சுமார் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் நிலம் எடுப்புக்கு பொதுமக்கள் விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்களை நிலங்களில் இருந்து வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கவில்லையெனில் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்த நிலையில் சேலம் அருகே சன்னியாசிகுண்டு ஜருகுமலை பகுதியில் 8 வழிச் சாலைக்காக சுரங்கப் பாதை அமைத்திட தேன்மலை என்ற பகுதியில் மலையின் மீது இயந்திரங்கள் அமைத்து, மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி நடைபெறும் மண் பரிசோதனை குறித்த தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் 8 வழிச் சாலையால் பாதிக்கப்படவுள்ள பொதுமக்கள், சம்பந்தப்பட்ட மலைக்கு நேரில் சென்று மண் பரிசோதனை நடைபெறும் இடத்தை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று விவசாயிகளை வெளியேற்றினர். தொடர்ந்து சனிக்கிழமை அப்பகுதிக்கு பொதுமக்கள் மீண்டும் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் வருவதைக் கண்ட அங்கிருந்த தொழிலாளர்கள் பணியை தற்காலிகமாக நிறுத்தினர்.
நீதிமன்றத்தின் உத்தரவையும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து, எட்டு வழிச் சாலைக்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவது தங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு மற்றும் இடைக்கால தடையை மீறியும் பசுமை வழிச் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நீதிமன்றம் இதில் தலையிட்டு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT