ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வலியுறுத்தி தீர்மானம்

முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து, ஒரு நபர் குழு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து, ஒரு நபர் குழு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் இரா.இளங்கோவன், கௌரவத் தலைவர் இரா.பாலகிருஷ்ணன், ஆலோசகர் ஆ.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 21 மாத உழைப்புக்கான நிலுவைத் தொகையை தர வேண்டும். முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து ஒரு நபர் குழு அறிக்கையினை உடனே வெளியிட வேண்டும். 2004-06 ஆண்டுகளில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் பெற்ற முதுநிலை ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணிவரன்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.
நீட் பயிற்சி என்ற பெயரில் முதுநிலை ஆசிரியர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கற்பித்தல் பணியினை செய்யவிடாமல் தடுப்பதும், மாணவர்களின் கற்றல் உரிமையினை தடுப்பதும், விடுமுறை நாள்களில் பயிற்சி வகுப்புகள் நடத்த கட்டாயப்படுத்துவதும், அடிப்படை பணி விதிகளுக்கு முரணானது. எனவே, அப்பணிகளில் இருந்து முதுநிலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்வதோடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை முற்றிலும் முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். 2018-இல் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை 900-ஆக உயர்த்தியும், ஏற்கெனவே காலியாக உள்ள பணியிடங்களுக்கும் சேர்த்து இரண்டாம்கட்ட கலந்தாய்வை வெளிப்படையாக நடத்திட வேண்டும்.
இந்த ஆண்டில் 11-ஆம் வகுப்பு, கணித அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை பெருமளவில் குறைந்துள்ளதை அரசு மிக கவனத்தோடு பரிசீலித்து உயர்கல்விக்கு அடிப்படையாக உள்ள மேல்நிலைக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com