தூய்மை பாரத விழிப்புணர்வு முகாம்

வாழப்பாடி ரயில் நிலையத்தில், சேலம் ரயில்வே கோட்ட வணிகப் பிரிவுடன், வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து

வாழப்பாடி ரயில் நிலையத்தில், சேலம் ரயில்வே கோட்ட வணிகப் பிரிவுடன், வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து தூய்மை பாரத விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சேலம் நகர்ப்புற ரயில்வே வணிக ஆய்வாளர் தாமரைக்கண்ணன் வரவேற்றார். சேலம் ரயில்வே கோட்ட வணிகப் பிரிவு மேலாளர் மது தலைமை வகித்து தூய்மைப் பணியை தொடக்கி மரக்கன்றுகள் நடும் விழாவை தொடக்கி வைத்தார்.
நெஸ்ட் அறக்கட்டளைத் தலைவர் பெரியார் மன்னன், செயலர் ஜவாஹர், சோமம்பட்டி மகேஸ்வரன், கமலாலயம் ஆதிராஜன், ஆடிட்டர் குப்பமுத்து, எம்ஜிஆர் பழனிசாமி, ஆசிரியர்கள் சிவ.எம்கோ, செல்வம், முனிரத்தினம், சாய்ஹானா, தன்னார்வலர்கள் பன்னீர்செல்வம், சுகவனேஸ்வரன், சரவணன், மணிவண்ணன் மற்றும் மாணவ-மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். முன்னதாக, சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணி காக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நெஸ்ட் அறக்கட்டளை இயக்குநர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com