வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம்: 22,115 விண்ணப்பங்கள் அளிப்பு

சேலம் மாவட்டத்தில் 3,288 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த

சேலம் மாவட்டத்தில் 3,288 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில் 22,115 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் 3,288 வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் சி.எஸ்.ஜ. பல்தொழில்நுட்பக் கல்லூரி, குளூனி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். 
மேலும், மாற்றுத் திறனாளிகள் எத்தனை நபர்கள் உள்ளனர் என்பதையும், அனைத்து மாற்றுத் திறனாளிகள் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்வதற்கு தேவையான வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வுக்கு பின் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியது: சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 3,288 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியல் மற்றும் ஜன. 10-ஆம் தேதி முதல் வரப்பெற்ற மனுக்களை பரிசீலித்து அவற்றை ஒருங்கிணைத்து கடந்த செப். 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 
அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 3,288 வாக்குச் சாவடிகளுக்குள்பட்ட பகுதிகளில் 14,18,239 ஆண் வாக்காளர்களும், 14,15,720 பெண் வாக்காளர்களும், 98 இதர வாக்காளர்கள் என மொத்தம் 28,34,057 வாக்காளர்கள்
உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2019-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலை சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யும் பணி செப். 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 22,115 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
இதில் படிவம் 6  பெயர் சேர்க்க 15,978 பேரும்,  படிவம் 7 பெயர் நீக்கம் செய்ய 2,634 பேரும், படிவம் 8 பெயர், முகவரி திருத்தம் மேற்கொள்ள 1,851 பேரும், படிவம் 8 ஏ குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதியின் ஒரு பகுதியில் இருந்து வேறுபகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய 1,652 பேரும் என மொத்தம் 22,115 பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர் என்றார்.
ஆய்வின் போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெகநாதன், வட்டாட்சியர்கள் திருமாவளவன், தீபசித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 104 வாக்குச்சாவடி மையங்களில், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் மொத்தம் 1,731 மனுக்கள் பெறப்பட்டன. 
ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன், கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன், வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், சங்கரி உள்ளிட்டோர் முகாம்களை ஆய்வு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com