சேலம்

விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டம்

DIN

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டக் கிளையின் பேரவைக் கூட்டம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வட்டக் கிளையின் துணைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சேலம் மாவட்டச் செயலர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் தங்கவேலு ஆகியோர் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறினர். விவசாயிகள் கே.கே.பழனியப்பன், முத்துக்கவுண்டர், செங்கோடக் கவுண்டர், எஸ்.நாராயணன், வெங்கடாஜலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். 
இதில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளின் விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதை கைவிட்டு சாலை ஓரங்களில் மின்கம்பி மூலம் கொண்டு செல்ல
வேண்டும். 
விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட வேண்டும். சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பச்சபாலியூர் பகுதியில் பல தலைமுறையாக விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு:தலைவராக பி.மாணிக்கம் , துணைத் தலைவராக எ.எஸ்.சுப்பிரமணி, செயலராக ஆர்.ராஜேந்திரன், துணைச் செயலராக பச்சபாலியூர் சுப்பிரமணி, பொருளாளராக ஏ.ஆறுமுகம், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஏ.சீனிவாசன், கே.கே.பழனிசாமி, ஜெ.செல்வமணி, ஆர்.முத்துசாமி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT