வேளாண் அலுவலர் தற்கொலை

பணியிட மாறுதலுக்குள்ளான உதவி வேளாண் அலுவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பணியிட மாறுதலுக்குள்ளான உதவி வேளாண் அலுவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட மல்லூரை அடுத்த சென்னக்கல் புதூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (54). இவர் வெண்ணந்தூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு இந்திரா என்ற மனைவியும், விஜயன் என்ற மகனும் உள்ளனர். இவர் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சேலத்திலிருந்து விழுப்புரம் செல்ல மனமில்லாத சிவக்குமார்,  உயர் அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வேளாண் அலுவலகத்துக்கு மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  கடந்த 10 நாள்களாக உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சிவகுமார் தனது வீட்டின் முன்பு உள்ள மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவர் இறந்தார்.
தகவலறிந்த மல்லூர் போலீஸார் சிவக்குமாரின் சடலத்தை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 
இதையடுத்து அவருடன் பணியாற்றிய அலுவலர்கள், நண்பர்கள், உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். சிவகுமாரின் நண்பர்கள் கூறுகையில், "பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com