அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது

வாழப்பாடி பகுதி அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் 13 ஆசிரியர்களைத் தேர்வு செய்து சேலம் ஹில் சிட்டி ரோட்டரி சங்கம் விருது வழங்கியது.

வாழப்பாடி பகுதி அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் 13 ஆசிரியர்களைத் தேர்வு செய்து சேலம் ஹில் சிட்டி ரோட்டரி சங்கம் விருது வழங்கியது.
இச் சங்கம் நிகழாண்டு 25 பேரை சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்து, சேலம் சண்முகா மருத்துவமனை மாநாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் "நேஷனல் பில்டர்' விருது வழங்கி கௌரவப்படுத்தியது.
இதில், வாழப்பாடி பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ரஜினி, பேளூர் பள்ளி ஆசிரியை திலகவல்லி, அரங்கனூர் தலைமை ஆசிரியர் மதுமதி, துக்கியாம்பாளையம் பூபதி, பெரியகிருட்டினாபுரம் மணியன், முத்தம்பட்டி காலனி காசிலிங்கம் குறிச்சி பாலாஜி தேக்கல்பட்டி ரவி, சோமம்பட்டி கண்ணகி, பேளூர் உருதுப்பள்ளி ஆசிரியை பொற்கொடி, வாழப்பாடி ஆண்கள் பள்ளி கோபிநாத், பேளூர் பெண்கள் பள்ளி தமிழாசிரியை தேன்மொழி,  பேளூர் ஆண்கள் பள்ளி தமிழாசிரியர் சிவ.எம்கோ ஆகிய 13 பேருக்கு,  சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் குழந்தைவேலு, சண்முகா மருத்துவமனை தாளாளர் மருத்துவர் பன்னீர்செல்வம் ஆகியோர் விருது வழங்கினர்.
விழாவில், தன்னம்பிக்கை பயிற்றுநர் வாழப்பாடி கு.பாரதி,  வழக்குரைஞர் செல்வகீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழப்பாடி இலக்கிய பேரவை, நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com