ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் மீது வழக்குப் பதிவு

முறையாக குடிநீர் வழங்காத ஆத்தூர் நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த

முறையாக குடிநீர் வழங்காத ஆத்தூர் நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த தேமுதிகவினர் 40 பேர் மீது ஆத்தூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அனுமதியின்றி ஊர்வலம், சாலையில் கூட்டம் கூடியதாகவும் 40 பேர் மீது ஆத்தூர் காவல் ஆய்வாளர்(பொ) ஆர். சரவணன் வழக்குப் பதிந்துள்ளார். முன்னதாக ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் கூறி சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான ஏ.ஆர்.இளங்கோவன் தலைமையில்  ஆத்தூர் நகராட்சி அலுவகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்,  மாட்டு வண்டியில் ஊர்வலமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com