சேலம்

துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

DIN


 ஊதியம் வழங்கப்படாததால், மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் துப்புரவுப் பணிக்கு போதிய நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. இதனால்,  துப்புரவுப் பணி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.   குத்தகைதாரரிடம் சுமார் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றிவருகின்றனர். இந்த நிலையில்,  உரிய காலத்தில் பணியாளர்களுக்கு குத்தகைதாரர் ஊதியம் வழங்கவில்லை என்று கூறி, பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், துப்புரவுப் பணிகள் முடங்கிவருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில்,  2 மாத ஊதியம் வழங்கப்படாததால்,  துப்புரவுப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  இதனால் துப்புரவுப் பணி முடங்கி குப்பைகள் வாரப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. 
இந்தப் பிரச்னையில் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு,  தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT