ஓமலூர், தாரமங்கலம் ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

ஓமலூர், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மேம்பாடு

ஓமலூர், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர். ரோகிணி ராம்தாஸ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
காடையாம்பட்டி வட்டம், பண்ணபட்டியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, கழிவு நீர் அகற்றுதல், சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதை பொது மக்களிடம் சந்தித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர் காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கும் நபர்களுக்கு காடையாம்பட்டி வட்டம், சிக்கனம்பட்டி ஊராட்சி, குப்பூரில் 49 எண்ணிக்கையில் தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய மாற்று வீடுகளை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து பல்பாக்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பல்பாக்கி அங்கன்வாடி மையம், நாரணம்பாளையம், சங்கீதப்பட்டி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதை
கேட்டறிந்தார். 
அதனைத்தொடர்ந்து தாரமங்கலம் பேரூராட்சி, கசுரெட்டிபட்டி ஊராட்சியில் வேளாண்மை துறையின் சார்பில் ராகி பயிருக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ரூ. 36,176 மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைத் தூவான் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, வேளாண்மை துறையின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ரூ. 50,780 மானியத்தில் சுழற் கலப்பை ரூ. 4,000 மதிப்பிலான சூரிய விளக்கு பொரியினையும், ரூ. 3,000 மானியத்தில் விசைத் தெளிப்பான் கருவி ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
கோமணான்டியூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை ஆய்வு மேற்கொண்டு முறையாக குளோரினேற்றம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பவளத்தானூர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் அனைத்து அடிப்படை வசதிகளும், முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது.
பின்னர் அழகுசமுத்திரம் நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு பொது விநியோகப் பொருள்கள் அனைத்தும் முறையாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்று சேர்கிறதா? என்பது குறித்தும் ஆட்சியர் ஆர். ரோகிணி ராம்தாஸ் ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com