சேலத்தில் இன்று ஓவியப் போட்டி

சேலத்தில் மாநில அளவிலான கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகள் பிப். 15-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சேலம்

சேலத்தில் மாநில அளவிலான கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகள் பிப். 15-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சேலம் ஒருங்கிணைந்த கல்வி கூடுதல்  முதன்மைக் கல்வி அலுவலர் து. கணேஷ்மூர்த்தி தெரிவித்தார்.
சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி பயிற்சி அரங்கில் வட்டார அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 126  மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சேலம் ஒருங்கிணைந்த கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) து. கணேஷ்மூர்த்தி கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வியின் குறிக்கோள்கள், இலவசக் கட்டயாக் கல்வி உரிமைச் சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம், சுகாதாரம்  சார்ந்து அனைத்து அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சிறப்பு உண்டு உறைவிடப் பயிற்சி பள்ளிகள் மற்றும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களிடையே 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை ஓவியப் போட்டியும், 4-ஆம் வகுப்பு மற்றும் 5-ஆம் வகுப்பு வரை பேச்சுப் போட்டியும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி  நடைபெற்றது. தற்போது வட்டார அளவில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மொத்தம் 126  மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 10 மணியளவில் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி பயிற்சி அரங்கில் நடைபெறவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com