சேலம்

சுதந்திரப் போராட்ட வீரர் காலமானார்

DIN


சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எம்.எல். ராமசாமி (98) வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
இதே பகுதியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.ஆர். கந்தசாமி, ஏ. மாரியப்பன் உள்பட இவருடன் சேர்த்து 16 பேரும் சிறு வயதிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு 6 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள்.
கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் அரசு சார்பில் வழங்கப்படும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான உதவித்தொகையைப் பெற்று வந்தார். சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் சேலம் மாவட்ட ஆட்சியரால் இவர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டுள்ளார். அவரது உடலுக்கு சேலம் தெற்கு தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் முக்கியப் பிரமுகர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். மேலும் அரசு தரப்பில் ஈமச் சடங்கு செலவுக்காக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆட்டையாம்பட்டி பகுதியில் நெசவுத் தொழில் செய்த இவருக்கு பாலசுப்பிரமணி, கந்தசாமி, நடேசன் ஆகிய 3 மகன்கள்உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT