மாநில அளவிலான மாப்பிள்ளை சம்பா பயிர் விளைச்சல் அறுவடை போட்டி

முல்லைவாடி கிராமத்தில் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா பயிர் விளைச்சல் அறுவடை போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. 

முல்லைவாடி கிராமத்தில் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா பயிர் விளைச்சல் அறுவடை போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா பயிர் அதிகம் விளைவிக்கும் நோக்கில் மாநில அளவிலான இப் பயிர் விளைச்சல் அறுவடை போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பங்கேற்ற விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் அறுவடை போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூர் முல்லைவாடி கிராமத்தில் நடைபெற்ற இப் போட்டியில் சென்னை வேளாண் இயக்குநர் சார்பில் கிருஷ்ணகிரி வேளாண் இ யக்குநர் என். ராஜேந்திரன், சேலம் வேளாண்மை இணை இயக்குநர் சார்பில் கே. சையத் அன்சர்பாஷா,விவசாயிகளின் பிரதிநிதி நடுவராக ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவில் அதிக விளைச்சல் காண்பிக்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2-ஆம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் ஆர். ஜானகி, பொ. வேல்முருகன், உதவி வேளாண்மை த. கண்ணன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் து. மணிகண்டன், மு. ராஜ்குமார் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com