எல்.ஐ.சி. புதிய நுண்காப்பீடு பாலிசி "மைக்ரோ பச்சத்' அறிமுகம்

எல்.ஐ.சி.-யின் புதிய நுண்காப்பீடு பாலிசியான மைக்ரோ பச்சத் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

எல்.ஐ.சி.-யின் புதிய நுண்காப்பீடு பாலிசியான மைக்ரோ பச்சத் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
சேலம் குகை பகுதி இந்தியன் வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. முதுநிலை கோட்ட மேலாளர் எல். செந்தூர்நாதன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் பி. ஜெயராமன் முன்னிலை வகித்தார். இத் திட்டத்தில் சிறப்புகளான குறைந்த பிரிமீயத்தில் உத்தரவாதமான காப்பீடு, விபத்து மற்றும் உடல் திறன் இழப்பு காப்பீடு, ஆட்டோ கவர் போன்ற பயன்களை எல்.ஐ.சி. மைக்ரோ மேலாளர் சி. எழிலரசு விளக்கினார்.
மேலும் இந்தியன் வங்கி மைக்ரோ ஸ்டேட் கிளைகளான சேலம் மற்றும் ஓமலூர் பகுதிகளில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இத் திட்டத்தின் மூலம் 5,000 புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க எல்.ஐ.சி. சேலம் கோட்டம் திட்டமிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com