ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
சேலம், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கடந்த இரு நாள்களாகக் கலந்து கொண்ட வாசன், சேலத்திலிருந்து திங்கள்கிழமை விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக,  அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. 
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை நிராகரித்துள்ளது.
இது அந்தப் பகுதி மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையைத் தொடர செய்யும் வகையில், நீதிமன்றத் தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்தும் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: காஷ்மீர் மாநிலத்துக்குள்பட்ட புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது நாட்டுக்கு நல்ல செய்தியாகும்.  ஆனாலும், பயங்கரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களாக உள்ளது என்றார். 
பேட்டியின்போது சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சுசீந்திரகுமார்,  கொள்கை பரப்புச் செயலாளர் உலகநம்பி, வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ரகுநந்த குமார், மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் பச்சனம்பட்டி சின்னையன், நகரத் தலைவர் மணிகண்டன் மாவட்ட இளைஞரணி தலைவர் சச்சு உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com