அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடையும்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடையும் என அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடையும் என அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறி கூட்டணி அமைப்பது வேறு. ஆனால், பா.ம.க.வைப் பொருத்தவரையில் தனிப்பட்ட முறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து வந்தார்கள்.
இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியவர் ராமதாஸ். ஆனால், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பிரச்னை வந்தபோது அதைக் காப்பாற்றியவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட தலைவருக்கு நினைவிடம் கட்டுவதற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்தது. 
இந்த நிலையில், பாமகவுடன் அக்கட்சி அமைத்துள்ள கூட்டணி துரோகக் கூட்டணியாகும். எனவே, ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. இந்தக் கூட்டணி தமிழகம் முழுவதும் படுதோல்வி அடையும்.
மக்கள் விரும்பாதக் கூட்டணியாகும். யாரும், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம். ஆனால், இந்தக் கூட்டணி தற்கொலைக்கு சமம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிறைய கட்சிகள் இல்லாமல் போகும் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி மீது துறை வாரியாக ஊழல் பட்டியலிட்டு புத்தகம் போட்டவர்கள்தான் பாமகவினர். இப்போது சமூக வலைதளங்களில் வரும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும் அன்புமணி ராமதாஸ்தான் பதில் சொல்ல வேண்டும்.
எங்களை பொருத்தவரையில் ஒத்த கருத்துள்ள சில கட்சிகளோடு கூட்டணி குறித்துப் பேசி வருகிறோம். கூட்டணி முடிவானவுடன் அதுபற்றி அறிவிக்கப்படும். இல்லையெனில் தனித்துப் போட்டியிடுவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com