கால்நடை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சி.டி.ஸ்கேன் மைய திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சி.டி.ஸ்கேன் மைய திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் பல்வேறு நலத் திட்டங்களை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சி.டி.ஸ்கேன் மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இது தொடர்பான விழா, கல்லூரி வளாகத்தில் மாலை 6.30 மணியளவில் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பி.மோகன், மருத்துவர் ஆர்.இழகியல் நெப்போலியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கால்நடை மருத்துவமனையின் மண்டல இயக்குநர் டாக்டர் வி.பி.பொன்னுவேல், பட்டயக் கணக்காளர் எல்.விஜயன், நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் எஸ்.கே.தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நபார்டு சிறப்பு நிதியுதவியின் கீழ் ரூ.1.86 கோடியில், கால்நடை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் கால்நடைகளுக்கு நோய் குறித்து ஆய்வு செய்வதுடன், அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏதுவாக அமையும். புற்றுநோய், இதய நோய், தலைப்பகுதி சம்பந்தமான நோய்கள் கண்டறிதலை இக்கருவி எளிதாக்குகிறது. கால்நடை வளர்ப்போருக்கு இக்கருவி நிறுவியது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதன் மூலம் தேவையற்ற பொருளாதார இழப்பைத் தவிர்ப்பதாக கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com