18 வயது நிறைந்தால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

18 வயது நிறைந்த இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தவறாமல் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, வாக்குரிமையை


18 வயது நிறைந்த இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தவறாமல் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, வாக்குரிமையை பயன்படுத்தி ஜனநாயக கடமையாற்றிட வேண்டுமென, வாழப்பாடியில் வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த சேலம் ஆட்சியர் ரோஹிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தல் பணிகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாம், சேலம் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமையும்ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் சிறப்பு முகாமை சனிக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஆய்வு செய்தார். புதிய வாக்காளர்களுக்கு வாக்குரிமையின் முக்கியத்துவம்  ஜனநாயக கடமை குறித்து அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது, வாழப்பாடி வட்டாட்சியர் வள்ளிதேவி, தேர்தல் துணை வட்டாட்சியர்  முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம், மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.
முகாமில், 18  நிறைவடைந்த இளைஞர்கள், இளம்பெண்கள்  அனைவரும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும், மிகப்பெரிய ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் முன் வரவேண்டும். 
இனிவரும் தேர்தலில், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய இயந்திரமும் இணைக்கப்படுகிறது. இதன்வழியாக,7 வினாடிகளுக்குள் வாக்களிப்பை உறுதிபடுத்தி கொள்ளலாம். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லுôரி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com