சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம்  வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க விவசாயிகள் ஆர்வம்

 சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசின் புதிய திட்டத்தில் விண்ணப்பிக்க சங்ககிரியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


 சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசின் புதிய திட்டத்தில் விண்ணப்பிக்க சங்ககிரியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிறுகுறு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் பொருட்டு நடப்பு நிதி ஆண்டில் பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ள சிறுகுறு விவசாய குடும்பம் ஒன்றுக்கு வருடத்துக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளில் ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாய குடும்பம் வாரியாகக் கணக்கெடுப்பு ஏற்கெனவே பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் எடுக்கப்பட்டு பயனாளிகள் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் இத் திட்டத்தில் பயன்பெறும் வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளன அறிவித்துள்ளார்.
இதையடுத்து சங்ககிரி வட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சனிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு எழுதுவோரிடம் சென்று  விண்ணப்பிக்கத் தேவையான நில உடைமை விவரம், வங்கி கணக்கு எண், ஆதார் எண், வயது, குடும்ப அட்டை எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை எழுதி வாங்கிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com