ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் இளைஞர்கள்

கூலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை திங்கள்கிழமை முதல் பதிவு செய்து வருகின்றனர்.

கூலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை திங்கள்கிழமை முதல் பதிவு செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஊராட்சியில் வரும் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை திங்கள்கிழமை முதல் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு மைதானத்தை அந்த ஊராட்சி மன்ற முக்கியப் பிரமுகர்கள் பூமிபூஜை செய்து பார்வையாளர்கள் மாடம், வாடிவாசல் அமைத்து வருகின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டை காண சேலம் மாவட்ட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் உத்தரவின்படி, அனைத்து பணிகளையும் கோட்டாட்சியர் ம.செல்வன் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் மேற்பார்வையில் கண்காணித்து வருகின்றனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கர் உத்தரவின்படி, ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் ஆய்வாளர் என்.கேசவன், ஊரக காவல் ஆய்வாளர் ஆர்.சரவணன் ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com