சேலம் மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அதிமுக நிறுவனரும்,  மறைந்த முதல்வருமான எம்ஜிஆர் 102 -ஆவது பிறந்த நாள் விழா சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

அதிமுக நிறுவனரும்,  மறைந்த முதல்வருமான எம்ஜிஆர் 102 -ஆவது பிறந்த நாள் விழா சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
சேலம்
மாவட்ட நிர்வாகம் சார்பில்...:  சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் மாலை அணிவித்து,  மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து,  மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ்,  வருவாய் கோட்டாட்சியர் செழியன்,  மக்களவை உறுப்பினர்  வி.பன்னீர்செல்வம், எம்எல்ஏ-க்கள் ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், எஸ்.ராஜா, எஸ்.வெற்றிவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் பி.கே.கோவிந்தன், மாநகராட்சி செயற் பொறியாளர் அ.அசோகன், சேலம் வட்டாட்சியர் மாதேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எம்ஜிஆர் கழகம் சார்பில்...:   சேலம் லட்சுமி நகரில் உள்ள எம்ஜிஆர்  சிலைக்கு எம்ஜிஆர் கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலர் கே.எம்.ஆறுமுகம் மாலை அணிவித்தார். மத்திய மேற்கு மாவட்டச் செயலர் கே.எஸ்.ரமேஷ், கிழக்கு மாவட்டத் துணைச் செயலர் கே.எ.பச்சமுத்து, மத்திய மாவட்டச்  செயலர் என்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் அண்ணா பவள விழாக் கட்டடத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நகரச் செயலர் அ.மோகன் தலைமையிலான அதிமுகவினர் ஊர்வலமாக வருகை தந்து மாலை அணிவித்தனர்.
இதேபோல், சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையிலானோர் சாரதா ரவுண்டானாவில் உள்ள எம்ஜிஆர் சிலை வரை ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஆர்.எம்.சின்னதம்பி, அதிமுக மாவட்டத் துணைச் செயலர் ஏ.டி.அர்ச்சுணன், அவைத்தலைவர் பி.கலியன், மாவட்டப் பிரதிநிதி பி.டி.தியாகராஜன்,ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா.தென்னரசு, காந்திநகர் வீடு கட்டும் சங்கத் தலைவர் நூர்முகமது, துணைத் தலைவர் வி.கதிரேசன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் டி.எம்.இராமலிங்கம்,வி.முஸ்தபா, இரவி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி.முரளிசாமி, ஒன்றியச் செயலர்கள் சி.ரஞ்சித்குமார்,கே.பி.முருகேசன்,ஏ.கே.சொக்கலிங்கம், பன்னீர்செல்வம், பூண்டு சுப்பிரமணி, கார்த்தி நாட்டார், லட்சுமணன், வழக்குரைஞர்கள் என்.இராமதாஸ்,ஞானசேகரன்,ஜெயசங்கர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சங்ககிரியில்...
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
விழாவுக்கு ஒன்றியச் செயலர் என்.எம்.எஸ். மணி தலைமை வகித்தார். தொகுதிச் செயலர் வி.ஆர்.ராஜா,   நகரச் செயலர் ஆர்.செல்லப்பன்,  நகர பொருளாளர் ஆர்.சந்திரசேகரன்,  ஒன்றிய இளைஞரணி செயலர் எ.நீதிதேவன், சங்ககிரி கூட்டுறவு பண்டகச் சாலை தலைவர் சி.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவுக்காக, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், சேலம் மாவட்ட அதிமுக விவசாய அணியின் இணைச் செயலருமான  துரை.ரமேஷ் தலைமை வகித்தார்.  இதில், கட்சிக் கொடி ஏற்றப்பட்டு,எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தம்மம்பட்டி  பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், எம்ஜிஆர் உருவப் படத்துக்கு அதிமுக நகரச் செயலர் பொ.பாலசுப்ரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இதில்,  கட்சிக் கொடியேற்றப்பட்டு,  இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com