இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம்: கோ-ஆப்டெக்ஸில் மார்ச் 31 வரை நீட்டிப்பு

சேலம் கோ- ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டமானது மார்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சேலம் கோ- ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டமானது மார்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பங்குனி மாதத்தில் சுபமுகூர்த்த நாள்கள் தொடர்ந்து வருவதால்,  இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்  திட்டத்தின் கீழ் கைக்குட்டை முதல் பட்டு புடவைகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது கோடைக்காலத்தை முன்னிட்டு,  காஞ்சி காட்டன்,  கோவை காட்டன், மதுரை காட்டன் போன்ற பருத்தி புடவைகளும், பாரம்பரிய புடவை ரகங்களும்,  போர்வை ரகங்கள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், துண்டு ரகங்களும் அதிக அளலல் விற்பனையாகின்றன.
இந்த நிலையில்,  வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க திட்டமானது மார்ச் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, குறிப்பிட்ட ரகங்களுக்கு மட்டும் 40 சதவீதம்  முதல் 70 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறுகையில், "விழாக்காலத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கோ ஆப்டெக்ஸின் கனவு நனவு திட்டம் என்ற மாதாந்திர தவணை திட்டத்தை பயன்படுத்தி பயன் பெற்று வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு 56 சதவீதம் கூடுதல் பலன் கிடைக்கின்றது' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com