நூல் வெளியீட்டு விழா    

மகாத்மா காந்தியின் 150- ஆவது, பாரதியாரின் 137 -ஆவது பிறந்த நாள் விழா, இரஞ்சன் குடிக்கோட்டை நூல் வெளியீட்டு விழா

மகாத்மா காந்தியின் 150- ஆவது, பாரதியாரின் 137 -ஆவது பிறந்த நாள் விழா, இரஞ்சன் குடிக்கோட்டை நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சேலம் ஜெயராம் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்க் காப்பு மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு,  கல்லூரி தாளாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அ.ஆறுமுகம் வரவேற்றார்.
விழாவில்,  பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட இரஞ்சன்குடியில் உள்ள பெரியக்கோட்டையைப் பற்றி தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஹாசிம் எழுதிய இரஞ்சன் குடிக்கோட்டை வரலாற்று நூலை மாவட்ட நீதிபதி ந.குணவதி வெளியிட்டார்.  நூல் ஆய்வுரையை சேலம் கம்பன் கழகச் செயலர் ப.ராமன் வழங்கினார். இதைத்தொடர்ந்து,   பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் வை.சங்கீதாவுக்கு முத்தமிழ் காப்பிய புகழ் பரவுவார் என்ற விருதை தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மூ.செ.கு.தங்கராசு வழங்கினார். 
இதையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு போட்டியில் 493 பேர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற 132 பேருக்கு பரிசுகளை திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரம பொருளாளர் க.சிதம்பரம் வழங்கினார். 
விழாவில் இலா.வின்சென்ட், முத்துமாரய்யன், ஜி.ஆர். மெட்ரிக் பள்ளி தாளாளர் நாராயணன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியை ஆர்.சாந்தா, புலவர் பிள்ளார் செட்டி, கு.ப.பூங்குன்ரன், கல்லூரி தமிழ்த்துறை விரிவுரையாளர் முருகேசன், சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்க் காப்பு மன்ற தோற்றுவிப்பாளர் இரா.மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com