திண்டுக்கல்

சீன உற்பத்தி பொருள்கள் ஆக்கிரமிப்பை மத்திய அரசு தடுக்க வேண்டும்: தம்பிதுரை

DIN

இந்திய பொருளாதாரத்தை சீனப் பொருள்கள் ஆக்கிரமித்து வருவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தி பாரம்பரிய சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
     திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதியில், செவ்வாய்க்கிழமை பொதுமக்களை சந்தித்து குறை கேட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    சிவகாயில், பல ஆண்டுகளாக இயங்கி வரும் பட்டாசு ஆலைகளை மூடுவதன் மூலம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும். அதே நேரத்தில், சீன பட்டாசுகள் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். சீனாவின் பல்வேறு உற்பத்தி பொருள்கள், இந்திய பொருளாதாரத்தை ஏற்கெனவே சீரழித்து கொண்டிருக்கின்றன. பல்வேறு சிறு தொழில்கள் நலிவடைந்துவிட்டன.  இந்திய எல்லையை மட்டுமின்றி, சீன உற்பத்தி பொருள்களை இங்கு சந்தைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தையும் சீனா ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில், அந்திய பொருள்களை வாங்குவதை தடுக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய தொழிற்சாலைகளை பாதுகாக்க மத்திய அரசு துணை நிற்க வேண்டும். தமிழக அரசு சார்பில், பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT